Monday, December 29, 2008

தமிழ்ப் பெயர்கள் தரவுத்தளம்

தமிழ்ப் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று அமைக்க முயன்று வருகிறோம்.

உங்களுக்குத் தெரிந்த பெயர்களை உள்ளிட்டும், தமிழ்ப் பெயர்களை உடைய தளங்களைத் தெரிவித்தும் உதவலாம். விவரங்களுக்கு - http://bit.ly/xxGe

நன்றி.

ரவி
Ravishankar

வலைத்தளங்களுக்கான அதியமான் மாற்றி 1.0 முன் வெளியீடு

அனைவருக்கும் வணக்கம்,

வலைத்தளங்களுக்கான அதியமான் மாற்றி 1.0 முன் வெளியீட்டுக் கோப்பினை இத்துடன் இணைத்திருக்கிறேன். உங்களுடைய வலைத்தளம் TSCII/TAM/TAB போன்ற குறியேற்றங்களில் அமைந்ததா? இத்தகைய வலைத்தளத்தின் வலைப்பக்கங்களை முழுமையாக ஒருங்குறிக்கு மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதே "வலைத்தளங்களுக்கான அதியமான் மாற்றி" (Adhiyaman for websites)

மேலதிக தகவல்களுக்குப் பார்க்க http://www.higopi.com/a4web/ReadMe.html

இந்த முன்வெளியிட்டுக் கோப்பை சோதித்துப் பார்த்து வழுக்களை அறிவிக்க கட்டற்ற தமிழ்க் கணிமைக் குழுவி்ன் உறுப்பினர்களுள் TSCII/TAM/TAB குறியேற்றங்களில் அமைந்த வலைத்தளங்களின் உரிமையாளர்கள்/நிர்வாகிகளை அழைக்கிறேன்.

மேலும், உங்களுக்குத் தெரிந்த அத்தகைய வலைத்தளங்களின் உரிமையாளர்கள்/நிர்வாகிகளுக்கு இந்தத் தகவலை அறியத் தருமாறு வேண்டுகிறேன்.

கண்டறியப்பட்ட வழுக்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் வரும் தைத் திருநாளில் இந்த மென்பொருளை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.

நன்றி.

ப்ரியமுடன்,

கோபி
Gopalakrishnan (Gopi)